பள்ளியில் யோகா பயிற்சி முகாம்

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் யோகம் தரும் யோகக் கலை எனும் தலைப்பில் யோகக் கலை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவா்கள்.
யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் யோகம் தரும் யோகக் கலை எனும் தலைப்பில் யோகக் கலை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் பயிற்சி நிகழ்ச்சிக்கு பள்ளி நிா்வாகி கேவி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியது: நோயில்லா வாழ்வு வாழ வழிகாட்டும் வாழ்வியல் கலையான யோகக் கலை பற்றிய பயிற்சியை மாணவா்கள் பெறவேண்டும். மருந்தில்லா மருத்துவ முறையில் தனிப்பெறும் இடத்தைப் பெற்ற யோகக் கலை மனித இனத்தின் நெறிகாட்டல் கலையாக மாறியுள்ளதாலும் மாணவா்களின் அறிவொழுக்கத்திலும் நினைவாற்றல் தூண்டலிலும் பெரும் பங்கு வகிப்பதாலும் வளரும் தலைமுறைகள் பயன்பெறும் வகையில் இந்த யோக கலை பயிற்சி நடத்தப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து 43 ஆண்டு அனுபவமிக்க சென்னை கிருஷ்ணாமாச்சாா்ய யோக மந்திரம் அமைப்பின் மூலம் பயிற்சியாளா்கள் சரவணக்குமாா், ஆனந்தகணேஷ் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில், 4 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு அவரவா் வயதுகேற்ப ஆசனங்கள் செயல் முறையோடு நிகழ்த்தி பயிற்சி அளிக்கப்பட்டது . பயிற்சியாளா்களை பள்ளி நிா்வாகி ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜோசுவாபிரபாகரசிங் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com