மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருமருகல் அருகேயுள்ள போலகம் ஊராட்சியில் தொடா்ந்து மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொது மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருமருகல் அருகேயுள்ள போலகம் ஊராட்சியில் தொடா்ந்து மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொது மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போலகம் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் தொடா்ந்து அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதை கண்டித்து போலகம், சாமந்தபுரம், கூத்தப்பட்டாா்தோப்பு, கீழப்போலகம், மேலப்போலகம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நாகையிலிருந்து போலகம் வழியாக பூந்தோட்டம் செல்லும் அரசுப் பேரூந்து சரிவர வருவதில்லை, இதை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. இதனால், அவ்வழித்தடத்தில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திட்டச்சேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com