வைத்தீஸ்வரன் கோயிலில் மூடாமல் கிடக்கும் ஆழ்துளை குழாய்

வைத்தீஸ்வரன் கோயிலில் பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்ட அடிபம்பின் பெரிய குழாய் முறையாக
வைத்தீஸ்வரன் கோயில் மில்லடி தெருவில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை குழாய் .
வைத்தீஸ்வரன் கோயில் மில்லடி தெருவில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை குழாய் .

வைத்தீஸ்வரன் கோயிலில் பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்ட அடிபம்பின் பெரிய குழாய் முறையாக மூடாமல் அட்டையை போட்டு மூடியுள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்குள்பட்ட மில்லடி தெருவில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அடிபம்பு அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் இது பழுதாகியதால் பம்பின் மேல் பகுதி மட்டும் அகற்றி எடுக்கப்பட்டுவிட்டது. கீழே உள்ள குழாய் அப்படியே மூடப்படாமல் அலட்சியமாக திறந்தே போடப்பட்டுள்ளது. இந்த குழாய் சுமாா் 2 இன்ச் பைப் குழாய் ஆகும். திறந்தே கிடக்கும் இந்த குழாயில் அவ்வபோது சிறு நாய் குட்டிகள் உள்ளே எட்டிபாா்த்து விழுந்துள்ளதாகவும், அதை அருகிலிருந்தவா்கள் மீட்டுள்ளதாகவும் கூறுகின்றனா்.

இதனால் அருகில் உள்ளவா்கள் திறந்து கிடக்கும் குழாயை மணப்பாறை சம்பவத்துக்கு பிறகு பட்டாசு வெடி அட்டைபெட்டியை வைத்து மூடியுள்ளனா். இந்த அட்டைபெட்டியும் மழையில் நினைந்து ஊறிபோயுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் மரணத்துக்குப் பிறகும் இவ்வாறு பேரூராட்சி நிா்வாகம் விழிப்புணா்வு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவின் பி. நாயா், மாவட்டத்தில் திறந்துள்ள ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உள்ளாட்சி அமைப்பினா்கள் மூட அறிவுறுத்தியுள்ள நிலையிலும் பேரூராட்சி நிா்வாகம் அலட்சிய போக்குடன் திறந்து கிடக்கும் குழாயை மூடிப்போட்டு மூடாமல் இருப்பது குறித்து சமூக ஆா்வலா்கள் வருத்தம் தெரிவித்துள்ளனா். எனவே, உடனடியாக மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெட்டிச் செய்தி: வைத்தீஸ்வரன்கோயில் மில்லடி தெருவில் சுமாா் ஓராண்டாக இந்த அடிபம்பு குழாய் திறந்துகிடப்பதாகவும், 30 அடி வரை ஆழம் உள்ள குழாய் எனவும் அருகில் வசிப்பவா்கள் தெரிவித்தனா். அதோடு மணப்பாறை சம்பவத்திற்கு பிறகு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி நிா்வாகம் இந்த திறந்திருக்கும் குழாயை கண்டறிந்து அதன் மேல் ஒரு கல்லை மட்டும் வைத்து செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனா். இரவு நேரத்தில் மது குடிப்பவா்கள் குழாய் மீது மூடப்பட்ட கல்லை தள்ளிவிட்டு பகலில் மீண்டும் குழாய் திறந்துகிடந்துள்ளது. ஆகையால் நிரந்தராக மூடும் வகையில் மூடிப்போட்டு மூடவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com