கடைமடையை எட்டாத காவிரி நீர்..! விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான சீர்காழி, கொள்ளிடத்துக்கு இதுவரை
கடைமடையை எட்டாத காவிரி நீர்..! விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான சீர்காழி, கொள்ளிடத்துக்கு இதுவரை வந்து சேராததால் சம்பா சாகுபடி செய்யமுடியுமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். நிகழாண்டு, குறுவை சாகுபடியை விவசாயிகள் மிகவும் சிரமத்துடன் மோட்டார் மற்றும் டீசல் எஞ்ஜினைப் பயன்படுத்தி நிலத்தடி நீரின் மூலம் சாகுபடி செய்தனர். தற்போது, சம்பா சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சீர்காழி, கொள்ளிடம் பகுதிக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. கடைமடை டெல்டா பாசனத்துக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருவது அணைக்கரையாகும். 
மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டு, ஆகஸ்ட் 17-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. பாசனத்துக்காக முக்கியத்துவம் கொடுத்து அணைக்கரையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அணைக்கரையிலிருந்து வடவாறு பிரிந்து வடவாறிலிருந்து தண்ணீர் வீராணம் சென்று சேர்ந்து வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் சென்று சேர்ந்து விட்டது. 
ஆனால் கடைமடை பகுதிக்கு பாசனம் தரும் வகையில் அணைக்கரையிலிருந்து பிரிந்து செல்லும் தெற்குராஜன் மற்றும் வடக்குராஜன் வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. ஏன் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.
 இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் எந்த பயனும் இல்லை. குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீரை பாசன வாய்க்கால்களில் திறந்து விட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். குடிமராமத்துப் பணியை கோடைக்காலத்தில் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக தண்ணீர் திறந்து விடும் நிலையில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. காலம் கடந்து பயிரிட்டால் சாகுபடி முறையாக நடைபெறுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.
இதுகுறித்து, கொள்ளிடம் வட்டார விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் கூறியது: பாசனத்துக்கு ஒரு சில நாள்களில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் ற்றுக்கணக்கான விவசாயிகளை திரட்டி அணைக்கரையை திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com