கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள செம்பியவேளூர் பூர்ணாம்பிகா புஷ்களாம்பிகா சமேத கழனியப்ப ஐயனார் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கழனியப்ப ஐயனார் கோயிலில்...
திருக்குவளை அருகேயுள்ள செம்பியவேளூர் பூர்ணாம்பிகா புஷ்களாம்பிகா சமேத கழனியப்ப ஐயனார் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உள்ள விநாயகர், பூர்ணாம்பிகா புஷ்களாம்பிகா சமேத கழனியப்ப ஐயனார், முனிஸ்வரர் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, செப்டம்பர் 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையும், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை காலை 10 மணிக்கு 2-ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு கடம் புறப்பட்டு, 11 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்து, முற்பகல் 11.30 மணியளவில் கோயில் கோபுரத்தில் உள்ள கும்பத்துக்கு 91 வகையான மூலிகை கலந்த புன்னிய நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வெள்ளந்தாங்கி அய்யனார் கோயிலில்...
மயிலாடுதுறை கூறைநாடு வெள்ளந்தாங்கி அய்யனார் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. 
மயிலாடுதுறை கூறைநாடு பூர்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சமேத வெள்ளந்தாங்கி அய்யனார் கோயிலில் குடமுழுக்கு உத்ஸவம் செப்டம்பர் 7-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், செப்டம்பர் 9-ஆம் தேதி 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜையும், செப்டம்பர் 10-ஆம் தேதி 4 மற்றும் 5-ஆம் கால யாகசாலை பூஜைகள்ம் நடைபெற்றன. 
குடமுழுக்கு நாளான புதன்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பூஜையின் முடிவில், மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் வேத முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. இதையடுத்து, மூலஸ்தான குடமுழுக்கு செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
புதுச்சேரி  கே. கணேச சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் ஜி. சிதம்பரம், ஆர். பாலசந்தர், ரெங்கநாதன், ராமசாமி, ரவி, சாலியர் மகாஜன சங்கத் தலைவர் பி. ரெங்கராஜ், என். பொன்னம்பலம், ராஜேந்திரன், கனகசபை உள்ளிட்ட குடமுழுக்கு கமிட்டியினர் செய்திருந்தனர்.


குத்தாலம் சுந்தரேசுவரர் கோயிலில்...
குத்தாலம் ராஜகோபாலபுரம் மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேசுவரர் கோயிலில் ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, செப்டம்பர் 8-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் விழா நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து ஐந்து கால யாக சாலை பூஜை நிறைவடைந்து, புதன்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜையில் கோ பூஜை, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்று கடம் புறப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடங்களை எடுத்து வந்து வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மல்லபுரம் ஆர். பிச்சுமணி சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com