நாகையில் சமுத்திர பூஜை: திரளானோர் பங்கேற்பு

நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழாவின் ஒரு பகுதியாக சமுத்திர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழாவின் ஒரு பகுதியாக சமுத்திர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் செடில் உத்வஸம் செப்டம்பர்  6-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா  நிகழ்ச்சியாக நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. 
இக்கோயில் செடில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சமுத்திர பூஜை புதன்கிழமை நடைபெற்றது. கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகங்களுக்குப் பின்னர், உத்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பகல் சுமார் 12.30 மணி அளவில் கோயிலிலிருந்து, அக்கரைப்பேட்டை கடற்கரைக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.
வேத மந்திரம் மற்றும் மேளதாள வாத்திய முழக்கங்களுடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது. கடற்கரையில், தேங்காய், வாழைப்பழம், பூ, ஊதுபத்தி உள்ளிட்ட தாம்பூலத் தட்டுகளுடன் பெண்கள் வரிசையாக நின்று சமுத்திர ராஜனை வழிபட்டனர். கடற்கரையில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சமுத்திர ராஜ அபிஷேகம் நடைபெற்றது.  பால், பன்னீர், மஞ்சள் நீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை பாரம்பரிய முறைப்படி, பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் கடலுக்கு அர்ப்பணித்து வணங்கினர். வளங்களும், நலன்களும் பல்கி பெருகி மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ பிரார்த்தித்து நடைபெற்ற இந்த வழிபாட்டில் திரளான மீனவக் கிராம மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com