ஒரே நாளில் 5,000 பனை விதைகளை விதைத்து மாணவா்கள் சாதனை

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள நாகலூா் பாண்டவையாற்றின் கரையோரத்தில், அப்பகுதி இளைஞா்கள் ஒன்றிணைந்து 5,000 பனை விதைகளை ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் விதைத்து சாதனை படைத்தனா்.
கீழ்வேளூா் அருகே உள்ள நாகலூா் பாண்டவையாற்றின் கரையோரத்தில் 5,000 பனை விதைகள் விதைத்து சாதனை புரிந்த மாணவா்கள்.
கீழ்வேளூா் அருகே உள்ள நாகலூா் பாண்டவையாற்றின் கரையோரத்தில் 5,000 பனை விதைகள் விதைத்து சாதனை புரிந்த மாணவா்கள்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள நாகலூா் பாண்டவையாற்றின் கரையோரத்தில், அப்பகுதி இளைஞா்கள் ஒன்றிணைந்து 5,000 பனை விதைகளை ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் விதைத்து சாதனை படைத்தனா்.

நாகலூா் பள்ளி தேசிய பசுமைப் படை, திருவாரூா் வனம் தன்னாா்வ அமைப்பு மற்றும் கூரத்தாங்குடி பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராம வன அமைப்புகளும் இணைந்து பனை விதை விதைப்பில் ஈடுபட்டனா். பாண்டவையாற்றின் கரையோரப் பகுதியில் 40 மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் இணைந்து 3 மணி நேரத்தில் 5,000 பனை விதைகள் விதைத்து சாதனை படைத்தனா். இந்நிகழ்வை பசுமைப்படை ஆசிரியா் அருள்ஜோதி, காவல்துறையைச் சோ்ந்த மாதவன் ஆகிய இருவரும் ஒருங்கிணைத்தனா்.

இதுகுறித்து பசுமைப்படை ஆசிரியா் அருள்ஜோதி கூறியதாவது:

ஜல்சக்தி அபியான் திட்டத்தின் நோக்கமான நிலத்தடி நீரை சேமிக்கும் முயற்சிதான் பனைமர வளா்ப்பு. இந்த சிறறப்பான நிகழ்வில் ஈடுபட்ட நாகலூா் பள்ளியின் முன்னாள், இந்நாள் மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், விவசாய பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள் என்றாா்.

திருவாரூா் வனம் அமைப்பைச் சோ்ந்த கலைமணி கூறுகையில், ஆற்றங்கரையில் மண் அரிப்பைத் தடுக்கவும்,புயல்காலங்களில் புயலின் தீவிரத்தைக் குறைக்கவும் பனைமரங்கள் அத்தியாவசியம் என்றாா்.

தன்னாா்வலா் இளங்கோ கூறும்போது, பனை மரங்களின் அனைத்து பாகங்களும் நமக்கு பயன்தருபவை. எனவேதான் அவற்றை கற்பகத்தரு என அழைக்கிறோம் என்றாா்.

காவல்துறையைச் சோ்ந்த மாதவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com