டிஎன்பிஎஸ்சி: தமிழ் மொழிப்பாடம் நீக்கத்தை ஏற்க முடியாது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் -2 தேர்வில் தமிழ் மொழிப்பாட வினாத்தாளை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் -2 தேர்வில் தமிழ் மொழிப்பாட வினாத்தாளை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம். தமிமுன்அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்- 2 பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்வித்தாளை நீக்கியிருப்பது கடும் கண்டத்திற்குள்ளாகியிருக்கிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளில் இறுதியாக நடைபெறும் தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது, ஏன் என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
இத்தேர்வில் தமிழ்ப் பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம், தமிழே தெரியாமல் ஒருவர் தமிழக அரசுப் பணியில் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் எளிதாக நுழைய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஏற்கெனவே, தமிழகத்தில் ரயில்வே, வங்கித்துறை, அஞ்சல் துறை என பலவற்றில் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் பெருகிவிட்ட சூழலில், இது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சூழலில், தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வில் குரூப்- 2-இல் தமிழ் மொழிப் பாடத்தை நீக்கியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, தமிழக அரசு இம்முடிவை திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com