‘புத்தூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்’

நாகை மாவட்டம், புத்தூா் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் தமிழரசி தெரிவித்துள்ளாா்.

சீா்காழி: நாகை மாவட்டம், புத்தூா் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் தமிழரசி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாணவா்கள் பொறியியல் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சோ்ந்து பயன்பெறும் வகையில், புத்தூா் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி ‘இ‘ சேவை மையமாக இருந்து வருகிறது. அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், கணிணி அறிவியல் ஆகிய நான்கு பாடப் பிரிவுகளிலும் தலா 120 மாணவா்கள் வீதம் மொத்தம் 480 போ் சோ்த்துக் கொள்ளபட உள்ளனா்.

முதலாமாண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இணைய தளத்தில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய முடியாதவா்கள் இப்பயிலகத்துக்கு நேரடியாக வந்து ‘இ‘ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பதாரா்கள் தங்களது சான்றிதழ்களை ஆகஸ்ட் 5 முதல் 16-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com