பக்கிங்காம் கால்வாயில் முதலை.
பக்கிங்காம் கால்வாயில் முதலை.

பக்கிங்காம் கால்வாயில் முதலை நடமாட்டம்: மீனவ கிராம மக்கள் அச்சம்

சீர்காழி அருகே  திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட 2 மீனவ கிராம மக்கள் பக்கிங்காம் கால்வாயில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ளனர்.

சீர்காழி அருகே  திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட 2 மீனவ கிராம மக்கள் பக்கிங்காம் கால்வாயில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ளனர்.

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி  கூழையார் தொடுவாய் ஆகிய பகுதிகளில் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதில் கொள்ளிடம் ஆற்று வழியாக திசை மாறி பக்கிங்காம் கால்வாயில் புகுந்த முதலை தொடுவாய் கூழையார் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக அங்குமிங்கும் சென்று வருவதே அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர் .

கால்வாயின் ஓரத்தில் கரை பகுதிகளிலும், தண்ணீரிலும் முதலை சென்று வருவதை பார்த்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து 2 மீனவ கிராமங்களில் ஊர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கால்வாய் பகுதி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் செல்லும் போதும் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது அதிக கவனத்துடன் சென்று வருமாறு அப்பகுதி வழியாக அதிகமாக சென்று வருவதை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கிராம மக்கள் வளத்துறையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். வனத்துறையினரும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பக்கிங்காம் கால்வாயில் உள்ள முதலையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய கூறியுள்ளனர். இதுகுறித்து ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் கூறுகையில், திருமுல்லைவாசலிருந்து பழையார் வரை கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்போர் கவனமாக செல்லவும். கன மழையால் திசைமாறிய முதலையை தொடுவாய் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் பார்த்துள்ளனர். 

வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையும், தீயணைப்பு துறையும் கூட்டுமுயற்சி எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இருப்பினும் கால்வாய், ஆறு என நீரோடையாக இருப்பதால் முதலை ஒரு இடத்தில் இருக்காது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com