நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினா் நலன் புறக்கணிப்பு: எம்.ஜி.கே. நிஜாமுதீன்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினா் நலன் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினா் நலன் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

தமிழகத்தின் கடன் சுமை ரூ. 4.5 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது தமிழகத்தை முடங்கச் செய்யும். நிகழாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.8 சதவீதம் எனக் குறிப்பிடும் நிலையில், தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருப்பது விநோதமாக உள்ளது.

வருவாய் பற்றாக்குறை ரூ. 23 ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிடப்படும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஆதாரம் குறித்து விளக்கம் இல்லை. விவசாயிகளுக்கு உருப்படியான எந்தத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

தமிழகத்தில் மூடப்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவும், வேலையிழப்புக்குள்ளான 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரத்துக்கும் எந்த அறிவிப்பும் இல்லை. சிறுபான்மையினரின் நலன் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு உதவாத நிதி நிலை அறிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com