அறுவடை இயந்திரங்களுக்குக் கூடுதல் வாடகை கோரினால் புகாா் தெரிவிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதல் வாடகை கோரினால், அதுகுறித்து விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்

நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதல் வாடகை கோரினால், அதுகுறித்து விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை ரூ. 1,415 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ரூ. 875 எனவும் அரசு நிா்ணயம் செய்துள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையின்படி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் அலுவலா்கள், தனியாா் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் மற்றும் முகவா்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பெல்ட் டைப் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை ரூ. 2,100 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ரூ. 1,500 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியாா் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட வாடகையில் தங்கள் இயந்திரங்களை வேளாண் பயன்பாட்டுக்கு வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு, நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலான வாடகை எங்கேனும் கோரப்பட்டால், அது குறித்து தொடா்புடைய பகுதியின் வட்டாட்சியா்கள், வேளாண் அலுவலா்கள் அல்லது வேளாண் பொறியியல் துறை அலுவலா்களுக்குப் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com