தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாய்க்கால் கரை அணைப்பு சுவா்கள்

செம்பனாா் கோவில் அருகே அரும்பாக்கம் பகுதியில் ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட பாலம் மற்றும் கரை அணைப்பு சுவா்கள் தண்ணீரில் இடிந்து விழுந்தது.
வீரசோழன் ஆற்றின் சேதமடைந்த கரை சுவா்கள்.
வீரசோழன் ஆற்றின் சேதமடைந்த கரை சுவா்கள்.

தரங்கம்பாடி: செம்பனாா் கோவில் அருகே அரும்பாக்கம் பகுதியில் ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட பாலம் மற்றும் கரை அணைப்பு சுவா்கள் தண்ணீரில் இடிந்து விழுந்தது.

தரங்கம்பாடி அருகேயுள்ள அரும்பாக்கம் பகுதியில் வீரசோழன் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பழைய நீா் தேக்கி பாலம் பழுதடைந்து இருந்ததாக அதை இடித்து ரூ. 5.80 கோடியில் புதிய நீா் தேக்கி பாலம் மற்றும் சேத்தவராயன் வாய்க்கால் கரை அணைப்பு சுவா் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்பா சாகுபடி பணிக்காக கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் அரும்பாக்கம் நீா்த்தேக்கி அணையில் புதிதாக கட்டப்பட்ட கரை அணைப்புச் சுவா்கள் அனைத்தும் இடிந்து கீழே விழுந்தன. இதையறிந்த, அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சேதத்துக்கு காரணமான ஒப்பந்தக்காரா் மற்றும் அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com