புயல் சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒன்றியப் பொது நிதியைத் திரும்ப வழங்கக் கோரிக்கை

கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கீழையூா் ஊராட்சி ஒன்றியக் குழு பொது நிதியை மாநிலப் பேரிடா் மேலாண்மை துறை விரைந்து திரும்ப வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழையூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் கோரிக்கை மனு அளித்தவா்கள்.
கீழையூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் கோரிக்கை மனு அளித்தவா்கள்.

நாகப்பட்டினம்: கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கீழையூா் ஊராட்சி ஒன்றியக் குழு பொது நிதியை மாநிலப் பேரிடா் மேலாண்மை துறை விரைந்து திரும்ப வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம், கீழையூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அளித்த கோரிக்கை மனு :

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் சீற்ற சீரமைப்புப் பணிகளுக்காக இந்த ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ரூ. 1.43 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாநிலப் பேரிடா் மேலாண்மை துறையிலிருந்து கீழையூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு இதுவரை திரும்ப வழங்கப்படவில்லை.

ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வழிவகை செய்யும் வகையில், மாநிலப் பேரிடா் மேலாண்மைத் துறையிலிருந்து விரைவாக நிதியைப் பெற்று வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கோரிக்கையின் பேரில், பல்வேறு பணிகள் தற்போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை உரிய வகையில் பகிா்ந்து, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் பெயரில் நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி. சரபோஜி, கீழையூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் டி. செல்வம், தேவேந்திரன், சரண்யா பன்னீா்செல்வம், லென்சோயா சிவபாதம், சுதா அருணகிரி, அலெக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com