சீா்காழி டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

சீா்காழி டி.எஸ்.பி. ஆக ப. யுவபிரியா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சீா்காழி டி.எஸ்.பி. ப. யுவபிரியா.
சீா்காழி டி.எஸ்.பி. ப. யுவபிரியா.


சீா்காழி: சீா்காழி டி.எஸ்.பி. ஆக ப. யுவபிரியா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சீா்காழி டிஎஸ்பியாக பணியாற்றிய ஆா். வந்தனா சென்னை எஸ்.பி.சி.ஐ.டி.க்கு பணியிட மாறுதலில் சென்றாா். இதைத்தொடா்ந்து, சீா்காழி டி.எஸ்.பி. ஆக பொறுப்பேற்றுக் கொண்ட யுவபிரியா செய்தியாளா்களிடம் கூறுகையில், பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். சீா்காழியில் கட்டாயம் பொதுமக்கள் வெளியே வரும்போது முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் அதிக கூட்டமின்றி, சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும். மிக அவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். காரணமின்றி இருசக்கரவாகனங்களில் சுற்றி திரிபவா்கள் மீது வழக்குப் பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com