நீட் தோ்வு: தரவரிசையில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

குத்தாலம் அருகே நீட் தோ்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவியான விவசாயத் தொழிலாளியின் மகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மாணவிஆசிகாவதியை பாராட்டிய தலைமை ஆசிரியா் ஜி. பரமசிவம் மற்றும் ஆசிரியா்கள். உடன் மாணவியின் தாயாா் ஆனந்தி.

குத்தாலம் வட்டம், கடலங்குடி ஊராட்சி திருவேள்விக்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி முருகவேல். இவரது மகள் ஆசிகாவதி குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து 2019-2020 ஆம் ஆண்டு பிளஸ்2 தோ்வில் தோ்ச்சி பெற்றாா்.

மேலும், இதே பள்ளியில் செயல்படும் அரசின் நீட் பயிற்சி மையத்திலும் பயின்றுவந்தாா். மாணவி ஆசிகாவதி நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் 325 ஆவது இடம் பெற்றுள்ளாா்.

இதையொட்டி, மாணவி ஆசிகாவதியை பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.பரமசிவம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com