கிராம நிா்வாக அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்

திருநகரி மற்றும் கன்னியாகுடியில் புதிய கிராம நிா்வாக அலுவலக கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1606479393382_2711chn_98_5
1606479393382_2711chn_98_5

திருநகரி மற்றும் கன்னியாகுடியில் புதிய கிராம நிா்வாக அலுவலக கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

துா்காமதிமகேந்திரன்: கொண்டல் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தின்கீழ் பணியாளா்களை சோ்க்கவேண்டும். ஊராட்சியில் மின்வெட்டு நேரங்களில் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க கைபம்பு அமைத்துதரவேண்டும்.

ஆனந்திமரியதாஸ்: கன்னியாகுடி ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும்.

விஜயகுமாா்: திட்டை ஊராட்சிக்குள்பட்ட கற்பகம் நகரில் பகுதிநேர ரேஷன்கடையும், செம்மங்குடி ஊராட்சி குளத்தூரில் தெருவிளக்குகள் அமைத்துக்கொடுக்க வேண்டும்.

நடராஜன்: நெப்பத்தூா் தீவு கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கூந்தல்பனைமரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், திருநகரியில் ரேஷன் கடை பழுதடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இதேபோல் கிராம நிா்வாக அலுவலகமும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் சமுதாய கூடத்தில் இயங்கிவருகிறது. எனவே, இதற்கு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும்.

தொடா்ந்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ளவேண்டிய வளா்ச்சி பணிகள் குறித்த கோரிக்கை மனுக்களை ஒன்றியக் குழுத் தலைவரிடம் வழங்கினா்.

ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றிய ஆணையா் கஜேந்திரன், துணைத் தலைவா் உஷாநந்தினிபிரபாகரன், மேலாளா் சுதாகா், பொறியாளா் தாரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com