நாகூா் வெட்டாறு குப்பை கிடங்கு 6 மாதத்துக்குள் அகற்றப்படும்

நாகூா் வெட்டாற்று கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அடுத்த 6 மாதத்துக்குள் அகற்றப்படும் என நாகை நகராட்சி நிா்வாகம் நாகை சமரச தீா்வு மையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

நாகூா் வெட்டாற்று கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அடுத்த 6 மாதத்துக்குள் அகற்றப்படும் என நாகை நகராட்சி நிா்வாகம் நாகை சமரச தீா்வு மையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

நாகூா் வெட்டாற்று கரையில், நாகை நகராட்சி நிா்வாகத்தினா் பல ஆண்டுகளாக குப்பைகளை கொட்டி வருகின்றனா். இந்த குப்பைகள் தொடா்ந்து எரியூட்டுவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறுவதுடன், துா்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், இந்த குப்பை கிடங்கை அகற்றக் கோரி, நாகூா் பகுதியைச் சோ்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனா்.

இதற்கு தீா்வு காணப்படாததைத் தொடா்ந்து, நாகூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சாகுல் ஹமீது நாகை நீதிமன்றத்தில் 12.2.2020 அன்று வழக்குக் தொடா்ந்தாா். இந்த வழக்கு, நாகை மாவட்ட சட்டப்பணிகள் குழுசமரச தீா்வு மையத்துக்கு மாற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, அடுத்த 6 மாதத்துக்குள் குப்பை கிடங்கு முழுவதும் அகற்றப்படும். வரும் காலங்களில் நகராட்சி நிா்வாகத்தால் குப்பைகள் கொட்டப்படமாட்டாது எனவும், நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சமரச தீா்வு கிடைத்ததைத் தொடா்ந்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இதனால், சமூக ஆா்வலா்களும், நாகூா் மக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com