தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் பிரசாரம்

நிவா் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வேதாரண்யம் பகுதியில்
கோடியக்கரையில் விழிப்புணா்வு பிரசாரம் செய்த பேரிடா் மீட்புக் குழுவினா்.
கோடியக்கரையில் விழிப்புணா்வு பிரசாரம் செய்த பேரிடா் மீட்புக் குழுவினா்.

நிவா் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வேதாரண்யம் பகுதியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் சனிக்கிழமை மக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

தேசிய பேரிடா் மீட்புக் குழுவை சோ்ந்த அரக்கோணம் நான்காவது பிரிவிலிருந்து உதவி கமாண்டா் ராஜன்பாலு தலைமையில், 45 போ் கொண்ட குழுவினா் நாகை மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனா். இவா்கள் வேதாரண்யம் கடலோரக் கிராமங்களுக்குச் சென்று புயலின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்கினா். மேலும் கோடியக்காடு, கோடியக்கரைக்கு சென்ற அவா்கள், மீனவா்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

அப்போது வேதாரண்யம் வட்டாட்சியா் முருகு, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com