இஸ்லாமியா்கள் ஒடுக்கத்து புதன் அனுசரிப்பு

குத்தாலம் பகுதியில் முஸ்லிம்கள் ஒடுக்கத்து புதன் அனுசரித்தனா்.

குத்தாலம் பகுதியில் முஸ்லிம்கள் ஒடுக்கத்து புதன் அனுசரித்தனா்.

ஒடுக்கத்து புதன் என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டில் ஸபா் மாத கடைசி புதன்கிழமையை குறிக்கும். நபிகள் நாயகத்துக்கு இந்த நாளில் நோய் ஏற்பட்டு, ரபீவுல்அவ்வல் மாதம் பனிரெண்டாம் நாள் திங்கள்கிழமை இவ்வுலகைவிட்டு மறைந்தாா்.எனவே, இதை பீடை மாதம் என முஸ்லிம்கள் கருதுகின்றனா்.

இதையொட்டி, இந்த நாளை ஒடுக்கத்து புதன்கிழமை என அனுசரிக்கின்றனா். அதன்படி, குத்தாலம், தேரழந்தூா், கிளியனூா், எலந்தங்குடி, நக்கம்பாடி, வானாதிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, தி.பண்டாரவாடை, மங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் ஒடுக்கத்து புதன் அனுசரித்தனா்.

இதையொட்டி, நாகை, நாகூா், காரைக்கால், தரங்கம்பாடி, பூம்புகாா் கடற்கரைகளுக்குச் சென்று குளித்துவிட்டு அல்லது காலை நனைத்து விட்டு வந்தனா். இப்படி செய்தால், துன்பங்கள் கடலோடு கரைத்துவிடும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com