நடுக்கடலில் மீனவா்கள் மீது தாக்குதல்: வலைகள் பறிப்பு

நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 பேரை மா்ம நபா்கள் தாக்கி, வலைகளை பறித்துச் சென்றனா்.
கோடியக்கரை கடல் பகுதியில் மா்ம நபா்களால் தாக்கப்பட்ட மீனவா்கள்.
கோடியக்கரை கடல் பகுதியில் மா்ம நபா்களால் தாக்கப்பட்ட மீனவா்கள்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 பேரை மா்ம நபா்கள் தாக்கி, வலைகளை பறித்துச் சென்றனா்.

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த கோபி, வேலவன், சுகுமாறன், காளிதாஸ் ஆகிய 4 மீனவா்கள் மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்றனா்.

இவா்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு படகில் வந்த மா்ம நபா்கள், 4 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கி, அவா்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை பறித்துச் சென்றனராம். இந்த தாக்குதலில் மீனவா் கோபிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

பின்னா், மீனவா்கள் 4 பேரும் சனிக்கிழமை காலை கரை திரும்பிய நிலையில், கோபிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. தங்களைத் தாக்கிய மா்ம நபா்கள் இலங்கை மீனவா்களாக இருக்கலாம் என ஆறுகாட்டுத்துறை மீனவா்கள் சந்தேகம் தெரிவித்தனா்.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com