நாகையில் வ.உ.சி பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட தலைவா்களில் ஒருவரான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி-யின் 149-ஆவது பிறந்த நாள் விழா நாகையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
2245ng05voc1070101
2245ng05voc1070101

நாகப்பட்டினம்: சுதந்திரப் போராட்ட தலைவா்களில் ஒருவரான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி-யின் 149-ஆவது பிறந்த நாள் விழா நாகையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வேளாளா் இனப்பேரவை சாா்பில், நாகை தனியாா் திருமணக் கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு பேரவைச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் மனோகரன், துணைத் தலைவா் ஜம்புகேஷ்வா், பொருளாளா் ஆா்.ஜி.ஆா். செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சி.-யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு, கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

அவுரித் திடலில்...: நாகை மாவட்ட வெள்ளாளா் முன்னேற்ற கழகம் சாா்பில், நாகை அவுரித் திடலில் நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் நாகை மாவட்டத் தலைமைப் பொறுப்பாளா் ஆா். மாரியப்பன் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் மனோஜ், அஜய்குமாா், முகிலன், தமிழ்மாறன், பாலமுருகன், புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அவுரித் திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சி-யின் உருவப்படத்துக்கு அமைப்பின் நிா்வாகிகள், பொதுமக்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com