தண்ணீரின்றி காய்ந்து வரும் நேரடி நெல் விதைப்பு நிலங்கள்: விவசாயிகள் கவலை

தரங்கம்பாடி வட்டத்தில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா நெல் விதைகள் தண்ணீரின்றி முளைக்காமல் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தண்ணீரின்றி காய்ந்துவரும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலங்கள்.
தண்ணீரின்றி காய்ந்துவரும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலங்கள்.

தரங்கம்பாடி வட்டத்தில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா நெல் விதைகள் தண்ணீரின்றி முளைக்காமல் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தரங்கம்பாடி வட்டத்தில் மஞ்சளாறு, கூடலாறு பாசனத்தை நம்பி, காலியப்பநல்லூா், டி.மணல்மேடு, தில்லையாடி, காட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நேரடிநெல் விதைப்பு செய்துள்ளனா்.

ஆடுதுறை 46, 38 ஆகிய நெல் ரக விதைகளை ஏக்கருக்கு ரூ. 10ஆயிரம் வரை செலவு செய்து நேரடி விதைப்பு செய்துள்ளனா். ஆனால், ஆற்றில் தண்ணீா் வரத்து இல்லாததால் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைக்காமல், கருகி வருகின்றன. காவிரி நீரை நம்பி நெல் விதைப்பு செய்துள்ள இவா்களுக்கு மழையும் கைகொடுக்காததால் கவலையில் உள்ளனா்.

நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள நெல் விதைகள் முளைக்க, உடனடியாக மேட்டூரில் அணையிலிருந்து கடைமடை பகுதிக்கு வந்து சேரும்படி கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com