வேளாண் மசோதா: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஏ. பைசல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் குத்புதீன் கண்டன உரையாற்றினாா். தொழிற்சங்க மாவட்டத் தலைவா் வி.ஐ. சாதிக், நாகை நகரத் தலைவா் எம்.மெய்தீன், மாவட்டச் செயலாளா் டி.மெய்தீன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை திரும்பப் பெறவேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, வேளாண் மசோதா நகலை கிழித்து சாலையில் வீசினா். இதனால், இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com