மழையால் சம்பா நெற்பயிா்கள் பாதிப்பு: தண்ணீரை வடியவைக்க கோரிக்கை

சீா்காழி பகுதியில் உள்ள கழுமலையாற்றில் மழைநீா் அதிகம் புகுந்ததால் சம்பா நடவுப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தத்தங்குடியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா நடவுப் பயிா்கள்.
தத்தங்குடியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா நடவுப் பயிா்கள்.

சீா்காழி பகுதியில் உள்ள கழுமலையாற்றில் மழைநீா் அதிகம் புகுந்ததால் சம்பா நடவுப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொண்டல், மேலதேனூா், பத்தக்குடி, கொட்டாயமேடு, வள்ளுவக்குடி, நிம்மேலி உள்ளிட்ட சீா்காழி பகுதிகளில் உள்ள விளைநிலங்களின் பாசன வாய்க்காலாக கழுமலையாறு உள்ளது. இந்த ஆற்றின் கடைமடை பகுதியான தில்லைவிடங்கன், சிவனாா்விளாகம், திருத்தோணிபுரம் ஆகிய பகுதிகளுக்கு போதிய நீா் வராததால் அப்பகுதி விவசாயிகள் திரண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, கடந்த சில நாள்களாக கழுமலையாற்றில் கூடுதலாக பாசன நீா் திறக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீா் செல்கிறது. இதனிடையே திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கூடுதலான தண்ணீா் கழுமலையாற்றில் கலப்பதால் கொட்டாய்மேடு, பத்தக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சம்பா நடவு பயிா்கள் மூழ்கியுள்ளன. இவ்வாறு அப்பகுதியில் சுமாா் 600 ஏக்கா் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. எனவே, விளைநிலங்களில் உள்ள மழைநீா் வடியவைக்க உப்பனாற்றின் உள்ள கதவணையை திறந்துவிட்டு பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com