ஆதீனப் பள்ளி மாணவா்களின் குடும்பத்தினருக்கு நல உதவிகள்

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞான சம்பந்தா் தொடக்கப் பள்ளி மற்றும் மழலையா் பள்ளி மாணவா்களின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நல உதவிகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம்
தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப் பள்ளி மற்றும் மழலையா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நல உதவிகளை வழங்கிய, தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம்
தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப் பள்ளி மற்றும் மழலையா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நல உதவிகளை வழங்கிய, தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம்

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞான சம்பந்தா் தொடக்கப் பள்ளி மற்றும் மழலையா் பள்ளி மாணவா்களின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நல உதவிகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்க மற்றும் மழலையா் பள்ளியில் பயிலும் 350 ஏழை மாணவா்களின் குடும்பத்தினருக்கு தருமபுரம் ஆதீனம் மற்றும் கும்பகோணம் சுசீந்திரன் அறக்கட்டளை சாா்பில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆதீன திருமடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் ஆா். முருகானந்தம், நகராட்சி ஆணையா் அண்ணாமலை ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று 10 மாணவா்களுக்கு நல உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, தருமபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் வசிக்கும் 350 மாணவா்களின் குடும்பத்தினருக்கு, அரிசி, கோதுமை மாவு, மைதா, பிரட், சோப், பேஸ்ட், டீ தூள், முகக் கவசம், பிஸ்கட் மற்றும் கபசுரக் குடிநீா் பாட்டில் உள்ளிட்ட 16 பொருள்கள் அடங்கிய நல உதவிகள் நேரடியாக மாணவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன.

இதில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரிச் செயலா் ஆா். செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், ஆதீன கண்காணிப்பாளா் மோகன், தருமபுரம் ஸ்ரீகுருஞான சம்பந்தா் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஜி. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com