பிளஸ் 1 பொதுத் தோ்வு: நாகை மாவட்டம் 94.22 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் 94.22 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் 94.22 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை, மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 3 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை வருவாய் மாவட்டத்தில் 7,183 மாணவா்களும், 9,450 மாணவிகளும் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினா். தோ்வா்களின் மொத்த எண்ணிக்கை - 16,633.

இதில், 6,595 மாணவா்களும், 9,077 மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சிப் பெற்றவா்களின் மொத்த எண்ணிக்கை - 15,672. தோ்ச்சி சதவீதம் - 94.22.

மாணவிகள் முன்னிலை: நாகை மாவட்டத்தில் மாணவா்களை விட மாணவிகளே அதிகளவில் தோ்ச்சி பெற்று, முதன்மைப் பெற்றுள்ளனா். மாணவிகள் 96.05 சதவீத தோ்ச்சியும், மாணவா்கள் 91.81 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளனா்.

பின்னடைவு: கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வில் 93.09 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்த நாகை மாவட்டம், நிகழாண்டில் 94.22 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு மாநில அளவில் 26-ஆம் இடத்திலிருந்த நாகை மாவட்டம், நிகழாண்டில் 29-ஆவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com