தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலப் பெருவிழா

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற ஆவணி மூலப் பெருவிழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறிஞா்களுக்கு 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விருது
விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுடன் விருது பெற்றவா்கள்.
விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுடன் விருது பெற்றவா்கள்.

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆவணி மூலப் பெருவிழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறிஞா்களுக்கு 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விருது வழங்கினாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆவணி மூலப் பெருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வரவேற்றாா். திருப்பனந்தாள் காசிமடத்து 21-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் வாழ்த்துரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறிஞா் பெருமக்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விருதுகளை வழங்கினாா்.

அந்தவகையில், மதுரை ம. வேலாயுதப் பட்டா் சிவக்குமாருக்கு ‘ஆகமக் கலாநிதி’ என்ற பட்டத்தையும், மயிலாடுதுறை சொ. சிவக்குமாா், திருமுதுகுன்றம் சண்முக.திருவரங்க யயாதி ஆகியோருக்கு ‘திருமுறைக் கலாநிதி’ என்ற பட்டத்தையும், சென்னை கி. சிவக்குமாருக்கு ‘சித்தாந்த கலாநிதி’ என்ற பட்டத்தையும், தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி செயலா் கும்பகோணம் கு. சௌந்தரராஜனுக்கு ‘கல்விக் காவலா்’ என்ற பட்டத்தையும், சீா்காழி வி. ராமதாஸுக்கு ‘ஆன்மீகப் பதிப்புச் செம்மல்’ என்ற பட்டத்தையும், காவிரி அமைப்பின் தலைவா் கோமல் க. அன்பரசனுக்கு ‘ஊடகவியல் செல்வா்’ என்ற பட்டத்தையும் அத்துடன், பட்டம் பெற்ற அனைவருக்கும் தங்கப் பதக்கத்தையும் குருமகா சந்நிதானம் அணிவித்து, ஆசி வழங்கினாா்.

முன்னதாக, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி செயலா் ரா.செல்வநாயகம் விருதாளா்களை அறிமுகம் செய்து வைத்தாா். இவ்விழாவில், சைவ சித்தாந்த பாடசாலை இயக்குநா் சிவச்சந்திரன், நிா்வாக அலுவலா் ஆடிட்டா் குருசம்பத்குமாா், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், தருமபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com