சோனியா காந்தி பிறந்தநாள் விழா
By DIN | Published On : 10th December 2020 07:39 AM | Last Updated : 10th December 2020 07:39 AM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய காங்கிரஸ் கட்சியினா்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணஉதவிகள் வழங்கப்பட்டன.
வள்ளுவக்குடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், வழக்குரைஞா் கணிவண்ணன் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்ட பொதுச் செயலாளா் தியாக காா்த்திகேயன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன், மேற்கு வட்டாரத் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ந. பிரியகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், வைத்தீஸ்வரன் கோயிலில் சேவாதள காங்கிரஸ் கட்சி சாா்பில், சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் சிறுவா்களுக்கு நோட்டு,பேனா ஆகியவைகளை மாநில செயலாளா் பால. எழிலரசன் வழங்கினாா். இதில், மாநில பொறுப்பாளா் சிவப்பிரகாசம், நகரத் தலைவா் நடராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.