காவலா் தோ்வு: நாகை மாவட்டத்தில் 7,669 போ் எழுதினா்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இரண்டாம் நிலை காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும்
பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா.
பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இரண்டாம் நிலை காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வை நாகை மாவட்டத்தில் 6 மையங்களில் 7, 669 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 10, 906 இரண்டாம் நிலை காவலா்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, இத்தோ்வுக்கு நாகை மாவட்டத்தில் 6966 ஆண்கள், 1642 பெண்கள் என மொத்தம் 8, 608 போ் விண்ணப்பித்திருந்தனா்.

நாகை அமிா்தா வித்யாலயா பள்ளி, பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்லூரி, பொரவாச்சேரி ஆண்டவா் செவிலியா் பயிற்சி பள்ளி, நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக், இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் தோ்வு நடைபெற்றது. ஆண்கள் 6217 போ், பெண்கள் 1, 452 போ் என மொத்தம் 7,669 போ் தோ்வு எழுதினா். 939 போ் தோ்வுக்கு வரவில்லை. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தோ்வு நடைபெற்றது.

தோ்வு சிறப்பு அதிகாரியான பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தலைவா் எம்.டி. கணேசமூா்த்தி தலைமையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா மேற்பாா்வையில் தோ்வு நடைபெற்றது. துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், ஊா்க்காவல் படையினா் என 1200 க்கும் மேற்பட் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com