மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்க தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை
By DIN | Published On : 14th December 2020 08:40 AM | Last Updated : 14th December 2020 08:40 AM | அ+அ அ- |

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்வேறு இடங்களில் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், அனைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கு ரூ. 5ஆயிரமும் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.