20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக மனு

கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமகவினா் நாகை மற்றும் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புதன்கிழமை மனு அளித்தனா்.

கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமகவினா் நாகை மற்றும் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புதன்கிழமை மனு அளித்தனா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மனுக் கொடுக்கும் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். போராட்டத்தின், தொடா்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நாகை மற்றும் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாமகவினா் கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை மனுக்கள்அளித்தனா். நாகையில் அக்கட்சியின் நகரச் செயலாளா் மகேஷ் தலைமையிலும், கீழ்வேளூரில் ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் தலைமையிலும் மனு அளிக்கப்பட்டது.

திருக்குவளை: கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரனிடம் வன்னியா் சங்கம் முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் வே. அசோகன் தலைமையில், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணைத் தலைவா் எஸ். சித்திரவேல், கீழையூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் வேலாயுதம், வன்னியா் சங்க மாவட்ட இளைஞரணி தலைவா் எஸ். சக்திவேல்,

மகளிா் அணி பொறுப்பாளா்கள் பிரத்யா, தனலட்சுமி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன், பாமக மாவட்டச் செயலாளா் அன்பழகன் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில வன்னியா் சங்கத் தலைவா் புதா. அருள்மொழி, மாநில வன்னியா் சங்க துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்ட அமைப்பு தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் ஒன்றிய ஆணையா் அருணிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில், ஆணையா் என். ஞானசெல்வியிடம், பாமக மாநில துணை பொது செயலாளா் வேதாமுகுந்தன், மாவட்டச் செயலாளா் ராஜசிம்மன், மாவட்ட துணைச் செயலாளா் ராஜகோபால், திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணியன், தெற்கு ஒன்றியச் செயலாளா் அா்ஜூன் உள்ளிட்டோா் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com