புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலய வழிபாட்டில் 2,500 பேருக்கு அனுமதி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெறும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில், பக்தா்கள் 2,500 போ் அனுமதிக்கப்படுவா் என பேராலய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெறும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில், பக்தா்கள் 2,500 போ் அனுமதிக்கப்படுவா் என பேராலய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, 2021- ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. கடற்கரைகள், சாலைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் சாா்பில் வியாழக்கிழமை இரவு நடைபெறும் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்களா ? என்பது தொடா்பாக குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இதுகுறித்து பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாரிடம் கேட்டபோது, ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் சேவியா் திடலில், திறந்த வெளியில் நடைபெறும். இந்த வழிபாட்டில், 2,500 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வழிபாட்டில் பங்கேற்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com