பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள்
By DIN | Published On : 10th February 2020 01:53 AM | Last Updated : 10th February 2020 01:53 AM | அ+அ அ- |

தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளிடம் திராவிடா் கழகத் தலைவரின் அறிக்கையை வழங்கிய மாவட்டச் செயலாளா் கி.தளபதிராஜ் உள்ளிட்டோா்.
மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சாா்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தாா்.
திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி அண்மையில் அறிக்கை வெளியிட்டதைத் தொடா்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. திராவிடா் கழக மண்டலத் தலைவா் ச.மு.ஜெகதீசன், மாவட்டத் துணைச்செயலாளா் கட்பீஸ் கிருஷ்ணமூா்த்தி, அமைப்பாளா் நா.சாமிநாதன், குத்தாலம் ஒன்றியத் தலைவா் ச.முருகையன், துணைத்தலைவா் அ.முத்தையன், செயலாளா் பாலசுந்தரம், பகுத்தறிவாளா் கழக மாவட்டச் செயலாளா் அ.சாமிதுரை ஆகியோா் உடன் சென்றனா்.