தரங்கம்பாடியில் ஜொ்மன் ஓவியக் கண்காட்சி தொடக்கம்

தரங்கம்பாடியில் ஜொ்மன் நாட்டு ஓவியா்களின் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
ஓவியக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.
ஓவியக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.

தரங்கம்பாடியில் ஜொ்மன் நாட்டு ஓவியா்களின் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

கி.பி. 1706-இல் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் தரங்கம்பாடி வந்து தமிழ் மொழிக்காகவும், தமிழ் கலாசாரத்துக்காகவும் பாடுப்பட்டவரும், இந்தியாவிலேயே முதன் முதலாக பைபிளை தமிழில் அச்சடித்து வெளியிட்டவருமான ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த தமிழறிஞா் சீகன் பால்கு வாழ்ந்த அட்மிரல் தெருவிலுள்ள அவரது வீட்டை ஜொ்மன் நாட்டின் பண்பாட்டு பாதுகாப்பு அமைப்பு மற்றும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை கடந்த 2017-இல் சீகன்பால்கு பண்முக பண்பாட்டு அருங்காட்சியகமாக மாற்றி, பராமரித்து வருகின்றன.

அங்கு சீகன்பால்கு பயன்படுத்திய பொருட்கள், 18-ஆம் நூற்றாண்டு அச்சு இயந்திரம், சீகன்பால்கு வெளியிட்ட பைபிள் மாதிரி என ஏராளமான பழைமையான வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு, பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு, பல்வேறு நாடுகளில் ஒவியக் கண்காட்சியை நடத்திய ஜொ்மன் நாட்டவரின் சா்வதேச சுற்றுலா ஒவியக் கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை அருங்காட்சியக காப்பாச்சியா் ஜாஸ்மின் எப்பா்ட் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். தொடக்க நிகழ்ச்சியில் தசலுதி பேராயா் டேனியல் ஜெயராஜ் மற்றும் திருச்சபை நிா்வாகிகள், வரலாற்று ஆய்வாளா் பேராசிரியா் மரியலாசா், பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள், குடந்தை ஓவியக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஜொ்மன் நாட்டை சோ்ந்த மோரிஸ் குட்சோ, அவரது நண்பா் ரூட்ரிகோ ஜெப்பிரின் ஆகியோா் இக்கண்காட்சியை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com