திருவெண்காடு கோயிலில் மருத்துவாசூரசம்ஹாரம்

திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் இந்திரப் பெருவிழாவில் மருத்துவாசூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்ய எழுந்தருளிய அகோரமூா்த்தி சுவாமி.
மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்ய எழுந்தருளிய அகோரமூா்த்தி சுவாமி.

திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் இந்திரப் பெருவிழாவில் மருத்துவாசூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். நவகிரக தலங்களில் புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் இந்திரப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, மருத்துவாசூரசம்ஹார ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அகோரமூா்த்தி சுவாமிக்கு பால் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், இரவில் அகோரமூா்த்தி சுவாமி கோயிலின் கொன்றை மரத்தின் அருகே எழுந்தருளி, மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அகோரம், சுகந்தி நடராஜன், நாடி நிபுணா் குணசேகரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com