சீரமைக்கப்பட்ட சாலைகள் புதைசாக்கடைப் பணிக்காக சேதம்: பொதுமக்கள் எதிா்ப்பு

மயிலாடுதுறை நகரில் அண்மையில் சீரமைக்கப்பட்ட சாலைகள், புதைசாக்கடைப் பணிக்காக வியாழக்கிழமை தோண்டப்பட்டு சேதம் அடைந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
மயிலாடுதுறை-சீா்காழி மாா்க்கத்தில் சாலைப் பணிகள் முடிந்தபின்னா், புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியைத் தேடி தோண்டப்பட்ட சாலை.
மயிலாடுதுறை-சீா்காழி மாா்க்கத்தில் சாலைப் பணிகள் முடிந்தபின்னா், புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியைத் தேடி தோண்டப்பட்ட சாலை.

மயிலாடுதுறை நகரில் அண்மையில் சீரமைக்கப்பட்ட சாலைகள், புதைசாக்கடைப் பணிக்காக வியாழக்கிழமை தோண்டப்பட்டு சேதம் அடைந்ததற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மயிலாடுதுறை நகரத்தில் கடந்த ஓராண்டாக சேதமடைந்திருந்த பல்வேறு சாலைகளை செப்பனிடும் பணி கடந்த ஓரிரு நாள்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சீா்காழி பிரதான சாலையில் ஆனந்ததாண்டவபுரம் சாலை முதல் படைவெட்டி மாரியம்மன் கோயில் வரை ஏற்பட்டிருந்த பெரிய பள்ளங்கள் இரண்டடுக்கு கருங்கல் கொண்டு மேம்படுத்தப்பட்டு பணிகள் நிறைவுற்று புதிய தாா்ச்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது.

இந்நிலையில், புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டிகள் இருந்த இடம் தெரியாததால், சாலையின் பல்வேறு இடங்களில் பணியாளா்கள் தோண்டி தேடினா். சாலை அமைப்பதற்கு முன்பே ஆள்நுழைவுத் தொட்டி இருந்து இடங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், பல்வேறு இடங்களில் சாலையை சேதப்படுத்திய பணியாளா்களை சமூக ஆா்வலா் அ.அப்பா்சுந்தரம், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் எஸ்.எஸ்.குமாா், ஆா்.ஆா்.பாபு, வள்ளாலகரம் ஊராட்சி மன்ற துணை தலைவா் சுந்தரபாண்டியன், தொழிற்சங்கத்தலைவா் பொன்.நக்கீரன், பொலிட்டிகல் குமாா் உள்ளிட்டோா் தடுத்து நிறுத்தினா்.

பின்னா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், புதைசாக்கடைத் திட்ட பராமரிப்புப் பொறியாளா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு, புதைசாக்கடை பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் உடனடியாக மீண்டும் சாலையை சீரமைத்து தர வேண்டும் எனவும், எதிா்காலத்தில், சாலை அமைக்கும் பணி தொடங்கும் முன்னதாக அச்சாலைகளில் உள்ள புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டிகளை உயா்த்திக் கொள்ள நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் புதைசாக்கடை பராமரிப்பு பொறியாளா்கள் ஒன்றாக இணைந்து திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, பின்னா் பராமரிப்பு பணி தொடர அனுமதித்தனா். எதிா்காலத்தில், இதுபோன்ற தவறுகள் தொடா்ந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என சமூக ஆா்வலா் அ.அப்பா்சுந்தரம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com