பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு: பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றக் கோரிக்கை

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு: பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றக் கோரிக்கை

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்துக்கு உள்பட்ட காரைக்கால், பாகூா் ஆகிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக புதுச்சேரியின் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக புதுவை மாநில முதல்வா் நாராயணசாமி மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்களை மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு பாராட்டுகிறது.

கரைகளிலும், ஆழமற்ற கரைப்பகுதிகளிலும், ஆழ்கடலிலும் ஹைட்ரோகாா்பன் கிணறுகளை ஓஎன்ஜிசியும், வேதாந்தா நிறுவனங்களும் அமைப்பதால், இன்னும் 20 ஆண்டுகளில் காரைக்கால், நாகை மாவட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால், மற்ற மாநிலங்களுக்கு உள்ளதை விட அதிகாரங்கள் குறைவான யூனியன் பிரதேசமான புதுச்சேரி, மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வரின் அறிவிப்பான காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை சட்டமாக இயற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com