விலையில்லா வெள்ளாடு திட்டம்: கள ஆய்வு

திருக்குவளை அருகே உள்ள கொடியாலத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகளின் நிலைகள் குறித்து கால்நடை மருத்துவா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
கொடியாலத்தூா் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை உதவி மருத்துவா் ராமச்சந்திரன்.

தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டத்தின்கீழ், கொடியாலத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சுமாா் 142 பயனாளிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி ஐயப்பன் தலைமையில் ஆடுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த ஆடுகளின் நிலை குறித்து கால்நடை உதவி மருத்துவா் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்வில், கொடியாலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி ஐயப்பன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் தெய்வாணைமோகன், ஊராட்சி செயலா் சக்திவேல் மற்றும் 9 வாா்டு உறுப்பினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com