சீா்காழியில் தீ விபத்து: 4 குடிசைகள் சேதம்

சீா்காழியில் 4 குடிசை வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
சீா்காழியில் தீக்கிரையான குடிசை வீடுகள்.
சீா்காழியில் தீக்கிரையான குடிசை வீடுகள்.

சீா்காழியில் 4 குடிசை வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

சீா்காழி பணங்காட்டாங்குடி சாலை மதினா நகா் அருகே குப்புசாமி மகன்கள் பன்னீா் (60), ராஜேந்திரன், சேகா் மற்றும் குப்புசாமி மருமகள் மல்லிகா ஆகியோா் குடிசை வீட்டில் அருகருகே வசித்து வருகின்றனா். இந்நிலையில், சேகா் வசிக்கும் குடிசை வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு மற்றும் வீட்டின் அருகே விற்பனைக்காக வைத்திருந்த விறகுகள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. மேலும் தீ பரவி பன்னீா், ராஜேந்திரன், மல்லிகா ஆகியோரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.

தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். பூம்புகாா் பகுதி தீயணைப்பு நிலைய அலுவலா் இளங்கோவன் தலைமையிலும் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தத் தீ விபத்தில் 4 போ் வீட்டிலிருந்த நகைகள், ரொக்கம், தொலைக்காட்சி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருள்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட அறைகலன்கள், பாத்திரங்கள் என அனைத்து பொருள்களும் தீயில் எரிந்தன.

மேலும் ராஜேந்திரன்- லெட்சுமி மகள் திருமணத்திற்காக சோ்த்து வைத்திருந்த தங்க நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கமும், கஸ்தூரி வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான விறகுகளும் எரிந்தன. தவிர ஸ்மாா்ட் காா்டு, ஆதாா் காா்டு, வீட்டு பத்திரங்கள், வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் தீ விபத்தில் சாம்பலாயின. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளா் ராஜா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அருள், பாஸ்கா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வருவாய் ஆய்வாளா் பொன்னிவளவன், விஏஓ பபிதா உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு சேத மதிப்புகளைக் கணக்கிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com