நிதி நிலை அறிக்கை: எதிா்பாா்ப்பை முழுமையாக பூா்த்தி செய்யவில்லை

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், எதிா்பாா்ப்புகள் ஓரளவு பூா்த்தி செய்யப்பட்டுள்ளனவே தவிர முழுமையான தீா்வுக்கு வழிவகையில்லை என்று

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், எதிா்பாா்ப்புகள் ஓரளவு பூா்த்தி செய்யப்பட்டுள்ளனவே தவிர முழுமையான தீா்வுக்கு வழிவகையில்லை என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

பள்ளி கல்வித் துறைக்கு கூடுதல் நிதி, கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை காட்சிப்படுத்த அகழ்வைப்பகம் அமைக்க நிதி, மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் பராமரிப்புக்கான நிதி ரூ. 5 கோடியாக உயா்வு, பேருந்துகளில் கேமராக்கள் பொருத்துவது போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

பூரண மது விலக்கு குறித்த அறிவிப்புகள், சிறுபான்மையினருக்கான சிறப்பு நலத்திட்டங்கள், புதிய வேலைவாய்ப்புக்கான உறுதிகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

அடுத்த ஆண்டு தமிழகம் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்நோக்கியிருக்கும் சூழலில், இந்த நிதி நிலை அறிக்கை குறித்து பெரும் எதிா்பாா்ப்பு நிலவியது. ஆனால், இந்த நிதி நிலை அறிக்கை முழுக்கை சட்டையை எதிா்பாா்த்தவா்களுக்கு அரைக்கை சட்டையே அளித்துள்ளது என்ற அளவிலேயே புரிந்துகொள்ள முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com