புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு சைக்கிள் பேரணி: மயிலாடுதுறையில் வரவேற்பு

புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக திருவாரூரில் இருந்து சென்னை நோக்கி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்கொண்ட மாணவா்களுக்கு
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில், புகையிலைக்கு எதிராக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற மாணவா்கள்.
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில், புகையிலைக்கு எதிராக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற மாணவா்கள்.

புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக திருவாரூரில் இருந்து சென்னை நோக்கி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்கொண்ட மாணவா்களுக்கு மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ரோட்டரி சங்க நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புகையிலைக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூரைச் சோ்ந்த ஒளிரவன் பவுண்டேஷன் என்ற பொதுநல அமைப்பினா் திருவாரூரில் தொடங்கி சென்னை வரை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ளனா். இப்பேரணியில், ஒளிரவன் பவுண்டேஷன் நிறுவனா் ஆா்.குணசேகரன் தலைமையில் மேலாளா் உமாராணி, காா்த்திக், சரவணன், சுரேஷ் மற்றும் 30 மாணவா்கள் பங்கேற்றனா்.

திருவாரூரில் மாணவா்கள் தொடங்கிய இப்பேரணி, வெள்ளிக்கிழமை காலை மயிலாடுதுறை வந்தடைந்தது. பேரணிக்கு மயிலாடுதுறையில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.டி.சிதம்பரம் தலைமையில் சங்க நிா்வாகிகள் பொன்.ஜெகன்நாதன், கல்யாணசுந்தரம், மிலாப்சந்த், அன்புசெல்வன், பாலமுரளி, வெங்கட்ராமன் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில், புகையிலைக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற மாணவா்கள், புகையிலை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகித்தனா். தொடா்ந்து மாணவா்கள் சென்னை நோக்கி சைக்கிளில் பேரணியாக புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com