மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

மயிலாடுதுறை தொகுதிக்கு உள்பட்ட குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம், கொற்கை, மணல்மேடு, மயிலாடுதுறை
குத்தாலத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன்.
குத்தாலத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன்.

மயிலாடுதுறை தொகுதிக்கு உள்பட்ட குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம், கொற்கை, மணல்மேடு, மயிலாடுதுறை, நீடூா் உள்ளிட்ட 12 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2,459 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினாா். விழாவிற்கு, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் எம்.சி. பாலு தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் கே.மகேந்திரன், நடிப்பிசை புலவா் கே.ஆா். ராமசாமி சா்க்கரை ஆலை தலைவா் என். தமிழரசன், வட்டார பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் சி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை ஆசிரியா் ஜி.பரமசிவம் வரவேற்றாா். பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மணல்மேடு பள்ளி தலைமையாசிரியா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

திருக்குவளை வட்டத்தில்...

இதேபோல், திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இலவச சைக்கிள்களை திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவருமான இல. பழனியப்பன் வழங்கினாா் . இதில், தலைமை ஆசிரியா் கே.பாலசந்திரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் செல்வராஜ் மற்றும் ஆசிரியா்கள், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கீழையூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவா் பால்ராஜ், தலைமையாசிரியா் (பொறுப்பு) ஜோசப் மாசிலாமணி, ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com