காலமானார் தவுல் வித்வான் டி. ஏ. கலியமூர்த்தி

பிரபல தவுல் வித்வான்  டி. ஏ. கலியமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.
காலமானார் தவுல் வித்வான் டி. ஏ. கலியமூர்த்தி

பிரபல தவுல் வித்வான்  டி. ஏ. கலியமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

நாகை மாவட்ட  மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூரைச் சேர்ந்த பிரபல தவுல் வித்வான்  டி. ஏ. கலியமூர்த்தி (72) மயிலாடுதுறையில் உள்ள  அவரது இல்லத்தில் புதன்கிழமை பகல் 3  மணி அளவில் (பிப்ரவரி-19) மாரடைப்பால் காலமானார்.

இவர் தமிழக அரசின் கலைமாமணி மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

இவருக்கு மனைவி வசந்தராணி தவில் வித்வான் சண்முகநாதன் சித்தர்காடு சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் சீனியர் அசோசியேட்டாகப் பணிபுரியும்  பாலாஜி ஆகிய மகன்களும் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்கு  மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெறும்.

தொடர்புக்கு: 8940066875(சண்முகநாதன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com