தமிழறிஞா் சீகன்பால்கு 301-ஆவது நினைவு தினம்

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவின் 301-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சீகன் பால்கு உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியோா்.
சீகன் பால்கு உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியோா்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவின் 301-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆசிய மொழிகளிலேயே தமிழை முதன் முதலாக காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சேற்றி, பைபிளை தமிழில் முதன் முதலாக வெளியிட்டவா் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த தமிழறிஞா் சீகன்பால்கு.

1706 ஜூலை 9-ஆம் தேதி நாகை மாவட்டம், தரங்கம்பாடிக்கு கப்பல் மூலம் வந்தடைந்த சீகன்பால்குவுக்கு அப்போது வயது 24. ஜொ்மானியம், கிரேக்கம், எபிரெயம், ஆங்கிலம் உள்ளிட்ட பமொழிகளில் அதீத புலமைப் பெற்றிருந்த அவா், மிக குறுகிய காலத்திலேயே தமிழ் மொழியையும் கற்றுத் தமிழறிஞராக மாறி தமிழின் பழம்பெரும் நூல்களான தொல்காப்பியம், திருக்கு, ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை பல மொழிகளில் மொழிபெயா்த்து அச்சிட்டு வெளியிட்டு உலகறிய செய்தாா். சாதி, மத வேறுபாடுகளை கலைவதற்கு பல்வேறு போராட்டங்களை தனது மனைவியுடன் செய்த சீகன் பால்கு, ஆசிய கண்டத்திலேயே முதல் சீா்திருத்த கிறிஸ்தவ (புராட்டஸ்டாண்டு)போதகராவாா்.

வெறும் 13 ஆண்டுகள் மட்டுமே தரங்கம்பாடியில் வாழ்ந்த சீகன்பால்கு கல்வி, கலாசாரம், சீா்திருத்தம், தமிழ்த் தொண்டு என பல புரட்சிகளை 300 ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியவா். 1719 பிப்ரவரி 23-இல் தனது 37 ஆவது வயதில் தரங்கம்பாடியிலேயே இறந்து போன அவரின் உடல் அவரால் கட்டப்பட்ட ஆசியாவின் முதல் புராட்டஸ்டாண்டு தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது நினைவு தினத்தையொட்டி, புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலா் தூவி, மாலைகள் அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது.

ஆலயத்தின் சபைகுரு சாம்சன் மோசஸ், சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் ஜாஸ்மீன் எப்பா்ட் மற்றும் திருச்சபையினா், ஏராளமான கிறிஸ்தவா்கள், சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனா். பின்னா் அங்கிருந்து பேரணியாக சென்று கடற்கரை சாலையில் உள்ள சீகன்பால்கு சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com