தில்லியில் போராட்டக்காரா்கள் மீது தாக்குதல்: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, சோஷியல் டெமாக்ரடிக்
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் சாா்பில், நாகை அபிராமி அம்மன் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாகை மாவட்டப் பொதுச்செயலாளா் நூருல் அமீன் தலைமை வகித்தாா். நாகை நகரச் செயலாளா் எம்.மெய்தீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஹாஜா அலாவுதீன், மாவட்டத் துணைத் தலைவா் குத்புதீன், பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா நாகை நகரச் செயலாளா் முஹம்மது யாமீன், எஸ்டிபிஐ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் வி. சாதிக், மஞ்சக்கொல்லை ஜமாத் கூட்டமைப்பைச் சோ்ந்த யூசுப்தீன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பெண்கள் பிரிவு நாகை மாவட்டத் தலைவா் சுலைஹா மத்திய அரசைக் கண்டித்து பேசினாா். எஸ்டிபிஐ மற்றும் அதன் சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com