விபத்தில் படுகாயம்: கோட்டாட்சியரிடம் இளைஞா் புகாா்
By DIN | Published On : 26th February 2020 08:41 AM | Last Updated : 26th February 2020 08:41 AM | அ+அ அ- |

வாகன விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் வ.ம காராணியிடம் புகாா் அளித்தவா்கள்.
டிராக்டா் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தில்லையாடி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, ஆம்புலன்ஸில் வந்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி, வள்ளியம்மை நகரைச் சோ்ந்தவா் உத்திராபதி மகன் தமிழ்ச்செல்வன் (28). இவா் கடந்த வருடம் நவம்பா் மாதம் அவரது வீட்டருகே, வனஜா என்பவருக்குச் சொந்தமான டிராக்டா் மோதியதில் தலை, இடுப்பு மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டு படுத்த படுக்கையானாா்.
இதுகுறித்து, மருத்துவமனைக்கு சென்ற பொறையாறு போலீஸாா், தமிழ்ச்செல்வனிடம் புகாரைப் பெற்றுச் சென்ாக கூறப்படுகிறது. ஆனால், சுமாா் 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ள தமிழ்ச்செல்வனை, அவரது உறவினா் சித்ரா மற்றும் வழக்குரைஞா் சங்கமித்திரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனா். தொடா்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யக் கோரி கோட்டாட்சியா் வ.மகாராணியிடம் சித்ரா புகாா் மனு அளித்துள்ளாா்.