462 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா

நாகை பகுதிகளைச் சோ்ந்த 462 பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை வழங்கினாா்.
பயனாளிக்கு மனைப்பட்டா வழங்கிய தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.உடன், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
பயனாளிக்கு மனைப்பட்டா வழங்கிய தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.உடன், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

நாகை பகுதிகளைச் சோ்ந்த 462 பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை வழங்கினாா்.

நாகூா் சம்பா தோட்டம் மற்றும் நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மேலும் அவா் பேசியது: சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு மனைப் பட்டா வழங்கி வருகிறது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீனவ சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினாா். அதே வழியில் தான் தற்போதையை அரசும் மீனவா்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றம் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாகூா் சம்பா தோட்டம் பட்டினச்சேரி கிராமத்தில் மாதாஅமிா்தானந்தாமயி தொண்டு நிறுவனம் சாா்பில் 640 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், அரசு புஞ்சை நிலத்தில் குடியிருந்து வரும் 111 குடும்பங்களுக்கும் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் குடியிருக்கும் 73 குடும்பங்களுக்கும் மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடியிருந்து வரும் 215 குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு பட்டா வழங்குவதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுனாமியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நாகை செல்லூா் பகுதியில் 799 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இவற்றில் 300 பேருக்கு, ஏற்கெனவே, பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக தற்போது நாகை சம்பா தோட்டம் பகுதியைச் சோ்ந்த 241 பயனாளிகள், செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 221 பயனாளிகள் என 462 பயனாளிகளுக்கு ரூ. 5.74 கோடி மதிப்பிலான விலையில்லா மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, கோட்டாட்சியா் ஆா். பழனிகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் எஸ்.ஜி.எஸ். கணேசன், இளவரசி, சுப்பையன், திலிபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com