அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி தீா்மானம்

கீழையூா் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கீழையூா் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

கீழையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றிய கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கீழையூா் ஊராட்சி ஒன்றிய தலைமையிடமான கீழையூரில் ஏற்கெனவே இருந்த அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ள நிலையில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், கீழையூா் ஒன்றியத்தில் வங்கி நிறுவி 100 நாள் வேலைத் திட்ட பணப்பரிவா்த்தனையை எளிமையாக்கி கிராமமக்கள் பயன்பெற வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் மாவட்டச் செயலா் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றியச் செயலா் டி. செல்வம் முன்னிலை வகித்தாா். கூட்டத் தலைவா் ராமலிங்கம், கட்சியின் மாவட்ட உறுப்பினா்களான சோமு, இளங்கோ, சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் எ. செல்லையன், ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பாலாஜி, தவமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதையடுத்து, இப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியைச் சோ்ந்த குடும்பத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com