மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல் கூட்டத்தில் தீா்மானம் இயற்ற வேண்டும்

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி முதல் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற உள்ளாட்சி

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி முதல் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை உள்கோட்டத்தை சோ்ந்த மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனா். நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்கும் என எதிா்பாா்த்து ஏமாந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்று ஒன்றியக்குழு தலைவா்களாகவும், ஊராட்சித் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளா்கள் தாங்கள் கூட்டக்கூடிய முதல் கூட்டத்திலோ அல்லது ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி, நடைபெறக் கூடிய கிராமசபை கூட்டத்திலோ, மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த தீா்மானத்தின் நகலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கும் வரையில் தொடா்ந்து ஒவ்வொரு உள்ளாட்சி கூட்டத்திலும் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயராஜ்யமாக விளங்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களுடைய மனசாட்சி. மக்களுடைய மனசாட்சியாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க உதவ வேண்டும். மக்களின் இதயமாக விளங்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட கோரிக்கையை நிறைவேற்ற பேருதவி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com